/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் காப்பீடு திட்டம் பதிவு செய்வது எளிது
/
பயிர் காப்பீடு திட்டம் பதிவு செய்வது எளிது
UPDATED : அக் 24, 2025 06:46 AM
ADDED : அக் 24, 2025 12:08 AM
திருப்பூர்: விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெறும் வகையில், பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு (2025 - 26), சம்பா பருவத்தில் நெல், மக்காசோளம், சோளம் மற்றும் கொண்டைக்கடலை பயிர்களுக்கு, காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள், பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்யலாம். கடன் பெறாத விவசாயிகள், நடப்பாண்டுக்கான அடங்கல் சான்றை, வி.ஏ.ஓ.,விடம் பெற்று, அதனுடன் சிட்டா, வங்கிக்கணக்கு புத்தகம், ஆதார் அட்டையை இணைத்து பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பதிவு செய்யலாம்.
கட்டணம் எவ்வளவு? காப்பீடு கட்டணமாக, அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், நெற்பயிருக்கு, 578 ரூபாய்; அடுத்த மாதம், 30ம் தேதிக்குள், மக்காச்சோளத்திற்கு, 545 ரூபாய் மற்றும் கொண்டைக்கடலைக்கு, 254 ரூபாய்; டிச., 16ம் தேதிக்குள், சோளத்திற்கு, 55 ரூபாய் செலுத்த வேண்டும்.

