ADDED : பிப் 03, 2025 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் : பல்லடம் நகர காங்., கட்சி சார்பில் ஊழியர் கூட்டம் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் செல்வகுமார், சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம் காமராஜர் திடலில் ஏற்கனவே இருந்ததுபோல் காமராஜர் சிலை நிறுவ வேண்டும்.பனப்பாளையம் முதல் அண்ணாநகர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் மணிராஜ், நரேஷ் குமார், அமராவதி அப்பன், அர்ஜுனன் சக்திவேல், சுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.

