/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆபீஸ் கட்டுவது அவசியம்தான்... மக்கள் பிரச்னையை தீர்ப்பதும் முக்கியம்!
/
ஆபீஸ் கட்டுவது அவசியம்தான்... மக்கள் பிரச்னையை தீர்ப்பதும் முக்கியம்!
ஆபீஸ் கட்டுவது அவசியம்தான்... மக்கள் பிரச்னையை தீர்ப்பதும் முக்கியம்!
ஆபீஸ் கட்டுவது அவசியம்தான்... மக்கள் பிரச்னையை தீர்ப்பதும் முக்கியம்!
ADDED : மார் 16, 2024 11:59 PM
- நமது நிருபர் -
''நகரின் மையப்பகுதியில், அதுவும், 75 கோடி ரூபாய் செலவில், திருப்பூர் மாநகராட்சிக்கு புதிய கட்டடம் அவசியம் தானா?'' இப்படியொரு விமர்சனத்தை, நகரில் பலரும் எழுப்பி வருகின்றனர்.
''வளர்ந்து வரும் நகரில் கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டியதும்; புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதும், தொலை நோக்கு பார்வையில் செய்யப்படுகிற செலவினங்கள் தான், மாநகரை நிர்வகிக்கிற அலுவலகம், நவீனமயமாவதில் தவறில்லை.
அரசு இயந்திரங்கள் அலுப்பில்லாமல் பணி செய்வது, நல்லது தானே... மாநகராட்சிக்கு புதிய கட்டடம் அவசிய தேவை தான்'' என்கின்றனர், பலர். இந்த வாதம் நியாயமானதும் கூட.
ஏன், இந்த விவகாரம், பட்டிமன்ற விவாதமாக மாறிப் போயிருக்கிறது என்பதை ஆராய்ந்தால், மாநகரில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளமாக தேங்கிக் கிடக்கிறதுஎன்பது தான்.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பல பள்ளி கட்டடங்கள் பராமரிப்பின்றி, பாழடைந்த நிலையில் இருக்கின்றன; அவை சீரமைக்கப்பட வேண்டும். பல்லாயிரம் மாணவர்கள் படிக்கும் ஜெய்வாபாய், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளிகள், சிக்கண்ணா அரசு கல்லுாரிகளை சுத்தப்படுத்தி. உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
அதிகரிக்கும்ஆக்கிரமிப்பு
மாநகராட்சியில் ஆங்காங்கே உள்ள சிறு, சிறு பூங்காங்கள் பராமரிக்கப்படாமல், புதர்மண்டிக் கிடக்கின்றன; அவற்றை பொலிவூட்ட வேண்டும். மாநகராட்சி எல்லையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளால், சாலை 'சுருங்கி', போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து நேரிடுகிறது; ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி, சாலையோர நடைபாதை, சாலையோர பூங்கா அமைத்து, மீண்டும் ஆக்கிரமிப்பு எழாத வகையில் நடவடிக்கை எடுக்கலாம்.
புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தலைதுாக்கும் ஆக்கிரமிப்புக் கடைகள், அங்குள்ள கழிப்பறை பராமரிப்பில் உள்ள தொய்வு போன்றவை, பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. நகர சாலைகளையே 'முகவரி'யாக கொண்ட எண்ணற்றோர், சாலையோரம் படுத்து உறங்குகின்றனர்.
அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையிலான பணிகளை மேற்கொள்ளலாம் என, யோசனைகளை முன்வைக்கின்றனர், நகர வளர்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள்.
இவ்வாறு பல பிரச்னைகளை தங்கள் கவனத்துக்கு மக்கள் கொண்டுவரும் போது, அது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தினர் கள ஆய்வில் ஈடுபட்டு, உரிய அறிவுறுத்தல்களை வழங்குவது பாராட்டுக்குரியது; அதேநேரம், அப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைத்ததா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற யோசனையும் முன் வைக்கப்படுகிறது.
ஆங்காங்கே உள்ள பூங்கா பராமரிக்கப் படாமல், புதர்மண்டிக் கிடக்கின்றன; அவற்றை பொலிவூட்ட வேண்டும். மாநகராட்சி
எல்லையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளால், சாலை 'சுருங்கி', போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து நேரிடுகிறது

