ADDED : ஏப் 23, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், கல்லுாரில் அரங்கில், உலக பூமி தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், ''எண்ணற்ற இயற்கை வளங்களை கொண்டுள்ள நம் பூமியை பாதுகாப்பது, நமது கடமை. நெகிழி பொருட்களின் பயன்பாடுகளை தவிர்த்து, புவியின் மண்வளத்தை மேம்படுத்த வேண்டும்,'' என்றார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார்.