/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசல் ரவுண்டானா அமைப்பது அவசியம்
/
நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசல் ரவுண்டானா அமைப்பது அவசியம்
நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசல் ரவுண்டானா அமைப்பது அவசியம்
நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசல் ரவுண்டானா அமைப்பது அவசியம்
ADDED : மார் 18, 2025 09:52 PM
உடுமலை ;உடுமலை அருகே ஏரிப்பாளையத்தில், பல்லடம் மாநில நெடுஞ்சாலை மற்றும் செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் சந்திப்பு பகுதி உள்ளது.
செஞ்சேரிமலை, பெதப்பம்பட்டி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், ஏரிப்பாளையத்தில், மாநில நெடுஞ்சாலையில், இணையும் போது, சந்திப்பு பகுதியில், நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.
விபத்துகளை குறைக்க, போக்குவரத்து போலீஸ் சார்பில், சந்திப்பு பகுதி அருகே, தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. இதனால், செஞ்சேரிமலை ரோட்டில், வரும் வாகனங்கள், வேகம் குறைத்து, மாநில நெடுஞ்சாலையில், இணைந்தன. ஆனால், சில மாதங்கள் மட்டுமே, சிக்னல் பயன்பாட்டில் இருந்தது. பின்னர், சிக்னல் காட்சிப்பொருளாகி, தற்போது மாயமாகியுள்ளது. எனவே, சந்திப்பு பகுதியில், வாகனங்கள் தாறுமாறாக சென்று, விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து போலீசார் மீண்டும் அப்பகுதியில், சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அதே போல், நிரந்தர தீர்வாக, அப்பகுதியில், ரவுண்டானா அமைத்தால், நகர நுழைவாயிலில், ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க முடியும் என வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.