/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆபத்தான நிழற்குடை அகற்றினால் நல்லது
/
ஆபத்தான நிழற்குடை அகற்றினால் நல்லது
ADDED : நவ 19, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; அலகுமலையில், நிழற்குடை ஒன்று ஆபத்தான முறையில் உள்ளது. இடிந்து விழும் முன் அதனை அகற்ற வேண்டும்.
பொங்கலுார் ஒன்றியம், அலகுமலையில், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை உள்ளது. போதிய பராமரிப்பு இன்றி உள்ளதால் மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுந்து வருகிறது. தற்போது மழைக்காலம்.
தலைக்கு மேல் ஆபத்து இருப்பதை அறியாமல் பலர் அங்கு மழைக்கு ஒதுங்கி நிற்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் அதை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

