/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐ.டி.ஐ., மாணவருக்கு வேலைவாய்ப்பு
/
ஐ.டி.ஐ., மாணவருக்கு வேலைவாய்ப்பு
ADDED : பிப் 10, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் எல் அண்ட் டி ஷிப் பில்டிங் நிறுவனம் சார்பில் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்காக வரும், 18ம் தேதி, திருப்பூர் அரசு ஐ.டி. ஐ.,யிலும், 19ம் தேதி உடுமலை ஐ.டி.ஐ., மையத்திலும் நேர்காணல் நடக்கிறது. இதில் வெல்டர், பிட்டர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், லேத், டூல் மற்றும் டை மேக்கிங் பிரிவுகளில் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியுடையோர் இதில் பங்கேற்கலாம்.

