/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்ட் திறந்து ஒன்றரை மாதமாச்சு! அதிகாரிகள் அலட்சியத்தால் இழுபறி

ADDED : ஜூலை 15, 2025 08:46 PM
உடுமலை; உடுமலையில், புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு, ஒன்றரை மாதமாகியும், போக்குவரத்து கழக அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி வருகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து மப்சல் பஸ்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து டவுன் பஸ்கள் என, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் நெரிசல் அதிகரித்த நிலையில், 3.75 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து, கடந்த மே 29ம் தேதி, தமிழக முதல்வரால் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது.
பஸ் ஸ்டாண்டில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, போக்குவரத்து துறை, நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் செயல்பட முறையான அனுமதிஅளிக்கப்பட்டது.
ஆனால், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு ஒன்றரை மாதமாக பயன்பாட்டிற்கு வராமல் வீணாக உள்ளது.
உடனடியாக கூடுதல் பஸ் ஸ்டாண்டிலிருந்து, பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.