/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பேசுவதை விட அதிகம் கேட்பது சிறந்தது' மொழியாற்றல் வளர 'டிப்ஸ்'
/
'பேசுவதை விட அதிகம் கேட்பது சிறந்தது' மொழியாற்றல் வளர 'டிப்ஸ்'
'பேசுவதை விட அதிகம் கேட்பது சிறந்தது' மொழியாற்றல் வளர 'டிப்ஸ்'
'பேசுவதை விட அதிகம் கேட்பது சிறந்தது' மொழியாற்றல் வளர 'டிப்ஸ்'
ADDED : மார் 14, 2024 12:01 AM

திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், அவிநாசி அருகே கருமாபாளையத்தில், ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
முகாமில், இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, மாணவர்களுக்கு மொழியாற்றல் பயிற்சி வழங்கப்பட்டது. என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, பல்லடம் அரசு ல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியை கிருஷ்ணவேணி பேசியதாவது: தற்போதைய உலகில், நாம் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு தகுதி தேவைப்படுகிறது. எந்த துறையாக இருந்தாலும், நமக்கு தேவைப்படக் கூடிய தகுதி, தொடர்பு திறன் தான். மற்றவர்களிடம் பேசும் போது, முதலில் அவர்கள் சொல்வதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
அதிகமாக பேசுவதை விட அதிகமாக கேட்பது, மிக முக்கியம். இ-மெயிலில் பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது, மொபைல் போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும்; இதனால், கவனச்சிதறல் ஏற்படும். அதனால், நீங்கள் பகிர வேண்டிய விஷயத்தை சரியாக செய்ய முடியாது.
பேசுவதை போன்று, உடல் மொழியும் மிக முக்கியம். கண்களை நேருக்கு நேர் பார்த்து, தெளிவாக பேச கற்றுக் கொள்ள வேண்டும். யாரையும் கீழ்மையாக நினைத்து பேசக்கூடாது. நேர்மறை வார்த்தைகள், எண்ணங்களுடன், புன்னகை தவழ பேச வேண்டும். பேசுவதற்கு முன், உதிர்க்கும் வார்த்தைகள் சரிதானா என, ஒரு கணம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
மாணவ செயலர்கள் சுந்தரம், காமராஜ், ராஜபிரபு, செர்லின், விஜய் ஆகியோர் தலைமையில், 50 மாணவ, மாணவியர், ஐந்து குழுக்களாக பிரிந்து, பல்வேறு வாழ்க்கை கல்விக்கான பயிற்சி பெற்றனர்.
பின், துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். கருமாபாளையம் ஊராட்சி தலைவர் பூங்கொடி, துணைத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர்.

