ADDED : டிச 01, 2024 12:54 AM

வடகிழக்கு பருவம் துவங்கிய பிறகு, செப்., மாதம் இயல்பான அளவு மட்டுமே மழை பெய்தது; கடந்த அக்., மாதம், வரலாறு காணாத அளவுக்கு, அடைமழை பெய்துள்ளது. நவ., மாதம் துவங்கிய பிறகு, மழைப்பொழிவு குறைவாகவே இருந்தது.
மழை குறைந்ததால், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு துவங்கியது. சுளீர் வெயில் குறைந்து, இதமான மழைக்காலம் மக்களுக்கு ஆறுதலாக இருந்தது. தற்போது மழை குறைந்து பனிப்பொழிவு துவங்கிவிட்டது.
தமிழ் மாதத்தில், ஐப்பசி, கார்த்திகை என்பது குளிர்காலம் என்று குறிப்பிடுகின்றனர். மார்கழி மற்றும் தை மாதங்களை, முன்பனிக்காலம் என்றும், மாசி மற்றும் பங்குனி மாதத்தை பின்பனி காலம் என்றும் கூறுகின்றனர்.
மழைப்பொழிவுக்கான கார் காலம் முடிந்து, குளிர்காலம் துவங்கிவிட்டது. தீபாவளிக்கு பின் ஓய்வெடுத்த ரோட்டோர வியாபாரிகள், குளிர்காலம் பிறந்த பிறகு, உல்லன் 'ஸ்வெட்டர்', 'மப்ளர்' போன்ற வெதுவெதுப்பான பனியன் ஆடைகள் விற்பனை, உல்லன் குல்லா போன்ற விற்பனையை துவக்கியுள்ளனர்.

