/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறை கேட்டால் மட்டும் போதாது... தீர்வு கிடைத்தால் மட்டுமே சிறப்பு; மனு அளித்த மக்களின் எதிர்பார்ப்பு இதுவே!
/
குறை கேட்டால் மட்டும் போதாது... தீர்வு கிடைத்தால் மட்டுமே சிறப்பு; மனு அளித்த மக்களின் எதிர்பார்ப்பு இதுவே!
குறை கேட்டால் மட்டும் போதாது... தீர்வு கிடைத்தால் மட்டுமே சிறப்பு; மனு அளித்த மக்களின் எதிர்பார்ப்பு இதுவே!
குறை கேட்டால் மட்டும் போதாது... தீர்வு கிடைத்தால் மட்டுமே சிறப்பு; மனு அளித்த மக்களின் எதிர்பார்ப்பு இதுவே!
ADDED : மே 20, 2025 12:49 AM

திருப்பூர்; நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பக்தவச்சலம் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுனர். அம்மனுக்கள், மேல் நடவடிக்கை எடுப்பதற்காக துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.
திருப்பூர், பெரிச்சிபாளையம், அண்ணமார் காலனியை சேர்ந்த பொதுமக்கள், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர். பல்லடம், காமராஜ் நகரை சேர்ந்த சூரியநாராயணன், குறைகேட்பு கூட்ட அரங்கிற்கு வெளியே, போர்டிகோவில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். 'வீடு வாங்கித்தருவதாக கூறி, 11 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர். கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த பயனுமில்லை,' என கூறியவர், மொபைலை கையில் வைத்துக்கொண்டு, சமூக வைலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை போலீசார் சமாதானப்படுத்தி, மனு அளிக்கச் செய்தனர்.
ஊத்துக்குளி ஒன்றியம், பெருமாநல்லுார், சமத்துவபுரம், கருணாம்பதி பகுதி மக்கள்:
சமத்துவபுரம் மற்றும் கருணாம்பதியில் 200 வீடுகள் உள்ளன. சமத்துவபுரம் உருவாக்கப்பட்டு, 13 ஆண்டுகளாகிறது. சாலை வசதி உள்ளது. தனியார் பள்ளி, நிறுவன வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் இன்னும் அரசு பஸ் இயக்கப்படவில்லை. மாணவ, மாணவியர், தெரியாத நபர்களிடம் 'லிப்ட்' கேட்டு, பள்ளிக்கு சென்றுவருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. உடனடியாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெருப்பெரிச்சல் பா.ஜ., மண்டல தலைவர் உதயகுமார்:
மாநகராட்சி 2வது வார்டு கவுன்சிலர் கணவர், பாண்டியன் நகர் காமாட்சியம்மன் கோவில் பின், தனது வீட்டின் முன்புற காலி இடத்தை ஆக்கிரமித்துள்ளார். 20 அடி வழித்தடத்தை ஆக்கிரமித்து, கடைகள் கட்டி, வாடகைக்கு விட்டுள்ளார். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. கலெக்டர் விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்றி, வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
அதிகாரிகள் 'மிஸ்ஸிங்'
------------------
கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடத்தப்படும் குறைகேட்பு கூட்டங்களில், அனைத்து அரசு துறை சார்ந்த முதல்நிலை அதிகாரிகள் பங்கேற்பதில்லை. இரண்டாம், மூன்றாம் நிலையில் உள்ள அலுவலர்களையே அனுப்பிவைக்கின்றனர். நேற்றைய குறைகேட்பு கூட்டத்துக்கு, பெரும்பாலான அரசு அலுவலர்கள் ஆப்சென்ட் ஆகினர். இதையடுத்து, கூட்ட அரங்கில் இருக்கைகள் காலியாக கிடந்தன.
அனைத்து தாலுகாக்களிலும் இன்று முதல் ஜமாபந்தி துவங்குகிறது. ஜமாபந்தியில் மனு அளிக்கலாம் என்பதாலும், பள்ளி மாணவர் சேர்க்கை காரணமாக, நேற்றைய குறைகேட்பு கூட்டத்துக்கு, பொதுமக்கள் வருகையும் குறைந்து காணப்பட்டது. அரசு அலுவலர்கள், தங்கள் மனுக்களை வாங்கி மூலையில் போட்டு வைக்காமல், உரிய காலத்தில் பரிசீலனை செய்து, பிரச்னைகளை தீர்த்து வைக்கவேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.