/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஜாக்டோ - ஜியோ' வேலைநிறுத்த பிரசாரம்
/
'ஜாக்டோ - ஜியோ' வேலைநிறுத்த பிரசாரம்
ADDED : நவ 15, 2025 01:07 AM

திருப்பூர்: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், தமிழகம் முழுவதும் வரும் 18ம் தேதி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.
வேலை நிறுத்தம் தொடர்பாக, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சென்று, பிரசார இயக்கம், கடந்த 10ம் தேதி முதல் நடத்தப்படுகிறது. நேற்று, திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் பிரசார இயக்கம் நடத்தப்பட்டது. 'ஜாக்டோ - ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர் மலர்விழி உள்பட நிர்வாகிகள், வேலை நிறுத்தம் தொடர்பான பேனர் ஏந்தியவாறு பங்கேற்றனர்.
கடந்த 2003, ஏப். 1ம் தேதிக்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்தோருக்கும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய் வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வி.ஏ.ஓ., உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும்.
பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்பவேண்டும் என, பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

