/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழக சப்-ஜூனியர் கிரிக்கெட் அணி தேர்வு
/
தமிழக சப்-ஜூனியர் கிரிக்கெட் அணி தேர்வு
ADDED : நவ 15, 2025 01:07 AM
திருப்பூர்: ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா (எஸ்.ஜி.எப்.ஐ.,) தமிழக அணி தேர்வு, திருப்பூரில் நேற்று துவங்கியது.
ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஒவ் வொரு ஆண்டும் நடத்துகிறது.
டிச. மாதம் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், தமிழக வீரர், வீராங்கனைகள் அணிக்கான தேர்வு பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது.
அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில்,14 வயது பிரிவு தமிழக கிரிக்கெட் அணித்தேர்வு நேற்று துவங்கியது. மாநிலம் முழுதும், எட்டு மண்டலங்களில் இருந்து, 154 பேர் பங்கேற்றனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் தேர்வு போட்டியை துவக்கி வைத்தனர்.
பேட்டிங், பீல்டிங், கீப்பிங், கேட்ச், பவுலிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவில் திறமைகள் பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்றும் தேர்வு நடக்கிறது.
சிறப்பாக திறமை வெளிப்படுத்தும் வீரர்களில் இருந்து, 16 பேர் கொண்ட தமிழக கிரிக்கெட் அணி தேர்வு செய்யப்பட உள்ளது.

