/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
/
10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 07:38 AM

திருப்பூர்; ஜாக்டோ ஜியோ சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், வேலுமணி, பாலசுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கடந்த 2023, ஏப். 1ம் தேதிக்குப்பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கும், தற்போதுள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
l அவிநாசி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் துரைசாமி தலைமை வகித்தார். செந்தில்குமார் வரவேற்றார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்கள் சங்கத்தின் சார்பில், ராமகிருஷ்ணன், ரங்கசாமி, சுமதி, விஜயலட்சுமி, கருப்பன், சின்ராஜ் ஆகியோர் விளக்கவுரை அளித்தனர். கண்ணன் நன்றி கூறினார்.