sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உற்பத்தி சீசனில் நிலையான விலை கிடைக்காமல்.. இனிக்கவில்லை வெல்லம்! நேரடி கொள்முதலை எதிர்பார்க்கும் உற்பத்தியாளர்கள்

/

உற்பத்தி சீசனில் நிலையான விலை கிடைக்காமல்.. இனிக்கவில்லை வெல்லம்! நேரடி கொள்முதலை எதிர்பார்க்கும் உற்பத்தியாளர்கள்

உற்பத்தி சீசனில் நிலையான விலை கிடைக்காமல்.. இனிக்கவில்லை வெல்லம்! நேரடி கொள்முதலை எதிர்பார்க்கும் உற்பத்தியாளர்கள்

உற்பத்தி சீசனில் நிலையான விலை கிடைக்காமல்.. இனிக்கவில்லை வெல்லம்! நேரடி கொள்முதலை எதிர்பார்க்கும் உற்பத்தியாளர்கள்


ADDED : ஆக 14, 2025 08:41 PM

Google News

ADDED : ஆக 14, 2025 08:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: 'உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், வெல்லத்தின் விலை உயரவில்லை; பண்டிகை நாட்களில் வெல்லத்தை நேரடி கொள்முதல் செய்து நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும்,' என வெல்ல உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை ஏழு குள பாசன பகுதிகளான போடிபட்டி, பள்ளபாளையம், சுண்டக்கம்பாளையம் சுற்றுப்பகுதிகளில், கரும்பு பிரதான சாகுபடியாக இருந்தது.

முன்பு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பை விற்பனைக்கு அனுப்பி வந்தனர். நிலையான விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், வெல்லம் உற்பத்திக்கு பெரும்பாலான விவசாயிகள் மாறத்துவங்கினர்.

விளைநிலங்களில், கரும்பு ஆலை அமைத்து, மண்டை மற்றும் அச்சு வெல்லம் உற்பத்தி செய்து கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

முன்பு, பள்ளபாளையம் சுற்றுப்பகுதிகளில் மட்டும், 25க்கும் அதிகமான வெல்ல உற்பத்தி ஆலைகள் சீசன் சமயத்தில் செயல்பட்டு வந்தன.

சில ஆண்டுகளாக வெல்ல உற்பத்தியிலும், பல்வேறு பிரச்னைகளை உற்பத்தியாளர்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, கரும்பு வெட்ட போதிய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. பிற மாவட்டங்களில் இருந்து அறுவடை சீசனில் தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர்.

தற்போது, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து, தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுகின்றனர்; ஒரு டன்னுக்கு, 800 - 900 ரூபாய் வரை கூலி நிர்ணயிக்கப்படுகிறது.

அரசு கைகொடுக்குமா? அச்சு மற்றும் மண்டை வெல்லத்தின் பிரதான சந்தையாக கேரளா உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் கலப்பட பிரச்னையால், தமிழகத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் வெல்லத்துக்கு கேரளா அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியது.

பெருந்தொற்று காலத்தில் விற்பனை முழுவதுமாக பாதித்தது. தற்போது, அச்சுவெல்லம் கிலோ, 47 - 50 ரூபாய்க்கும், மண்டை வெல்லம் கிலோ, 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இருவகை வெல்லத்துக்கும் நிலையான விலை இல்லாததால், பாதிப்பு ஏற்படுகிறது என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது: தற்போதைய சீசனில், கரும்பு டன்னுக்கு, 4 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறோம். கடந்த சீசனை விட, டன்னுக்கு, 300 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. ஆனால், வெல்லம் விலை உயரவில்லை.

தொழிலாளர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. பண்டிகை சீசனில், தமிழக அரசு மொத்தமாக வெல்லத்தை கொள்முதல் செய்தால், நிலையான விலை கிடைக்கும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

வெல்ல உற்பத்தி தொழில் பாதிப்பால், அதை சார்ந்த தொழிலாளர்களும் வேலைவாய்ப்பின்றி பாதித்துள்ளனர். அச்சு வெல்லம் உற்பத்திக்கான அச்சு மரப்பலகை உடுமலை பகுதியிலேயே தயாரிக்கப்பட்டு வந்தது.

பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், இப்பணியில் அதிகளவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆலைகள் அமைப்பது குறைந்துள்ளதால், அச்சு மரப்பலகை தயாரிப்பும் குறைந்து நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us