/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்
/
ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்
ADDED : மே 20, 2025 12:37 AM

திருப்பூர்; திருப்பூர் ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிக்கான்ஸ் வேலுசாமி தலைமையில் இயங்கி வருகிறது.
இப்பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வில், 153 மாணவர்கள், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் தேவதர்ஷன், 497 பெற்று பள்ளி அளவில் முதலிடம், மாநில அளவில், மூன்றாமிடம் பெற்றார்.
ஹர்சிதா, 494 பெற்று இரண்டாமிடம், சஞ்சய் தர்ஷன், 493 பெற்று மூன்றாமிடம் பிடித்தார். மித்ரா, பூர்ணவர்த்தினி, பிரியதர்ஷினி ஆகியோர், 492 பெற்று, நான்காமிடம் பெற்றனர். 490க்கு மேல், ஆறு மாணவர்கள் பெற்றனர்.
சமூக அறிவியலில், 15, அறிவியல், 5, கணிதம், 4 என, மொத்தம், 24 பேர், சென்டம் பெற்றனர். தேவதர்ஷன், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய, மூன்று பாடங்களிலும், பிரியதர்ஷனி, சஜின் பாபு ஆகியோர், இரண்டு பாடங்களிலும், சென்டம் பெற்றனர்.
தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், ஊக்குவித்த ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர், செயலாளர், பொருளாளர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.