/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாம்பியன்
/
ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாம்பியன்
ADDED : செப் 01, 2025 12:18 AM

திருப்பூர்; திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
14, 17, 19 வயது மாணவருக்கான ஹாக்கி; 14, 17 வயது எறிபந்து; 14 வயது மாணவியருக்கான பூப்பந்துப்போட்டியில் முதலிடம்; 19 வயது மாணவருக்கான 3000 மீ, 100மீ, மும்முறை தாண்டுதல், குண்டெறிதல் போட்டிகளில் முதலிடம்; 17 வயது 3,000மீ, 1,500மீ, 4 x 100 மீ தொடர் ஓட்டம், கம்பூன்றித்தாண்டுதல் போட்டிகளில் முதலிடம்; 14 வயது 600மீ., ஓட்டத்தில் முதலிடம்; மகளிருக்கான 17 வயது வட்டெறிதல் போட்டியில் முதலிடம் பெற்றனர்.
இதேபோல் பல்வேறு போட்டிகளில்இரண்டாமிடமும் பெற்றுள்ளனர். மாணவர் பிரிவில் 119 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. மாணவியர் பிரிவில் 45 புள்ளிகள் பெற்று இரண்டாமிடம் பெற்றது.
மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி, அறக்கட்டளைச் செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ், பொருளாளர் சுருதிஹரீஸ், முதல்வர் மணிமலர் ஆகியோர் பாராட்டினர்.