/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் ஸ்ரீராம் அகாடமி நுாறு சதவீதம் தேர்ச்சி
/
ஜெய் ஸ்ரீராம் அகாடமி நுாறு சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 22, 2025 03:38 AM

திருப்பூர்; அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீ ராம் மெட்ரிக் பள்ளி பொது தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
திருப்பூர், அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீ ராம் அகாடமி மெட்ரிக் பள்ளியில், பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பு பொதுதேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். பத்தாம் வகுப்பில், பிரியா, 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், கோபிகா, 483 பெற்று இரண்டாமிடம், மேகநேத்ரா, சந்தியா ஆகியோர், 481 பெற்று, மூன்றாமிடம் பிடித்தனர்.
இரண்டு மாணவர்கள் சென்டம் எடுத்தனர்.
பிளஸ் 2வில், சுஷீதா, 587 பெற்று பள்ளி அளவில் முதலிடம், சங்கமித்ரா காவியா, 582 பெற்று இரண்டாமிடம், சம்ரிதி, 581 பெற்று மூன்றாமிடம் பெற்றனர். 22 மாணவர்கள் சென்டம் எடுத்தனர். பிளஸ் 1ல், சம்பத், 579 முதலிடம், சுபஹரிணி, 577 இரண்டாமிடம், சம்ரிதா, 572 மூன்றாமிடம் பெற்றனர். 11 மாணவர்கள் சென்டம் பெற்றனர்.
சாதனை புரிந்த மாணவ, மாணவியரை பள்ளி தலைவர் தங்கராஜ், துணை தலைவர் முத்து அருண், பள்ளி முதல்வர் கலைச்செல்வி, நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.