/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடல் இன்குபேஷன் ஆலோசகராக ஜெய்பிரகாஷ்
/
அடல் இன்குபேஷன் ஆலோசகராக ஜெய்பிரகாஷ்
ADDED : ஏப் 03, 2025 05:54 AM

திருப்பூர்; ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசு அடல் இன்குபேஷன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. நாடுமுழுவதும் அடல் இன்குபேஷன் மையங்கள் உருவாக்கப்பட்டு, புதுமையான தொழில் செய்ய முயற்சிப்போரை ஊக்கப்படுத்தி, தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது.
பனியன் உற்பத்தி நகரான திருப்பூரை சேர்ந்த ஜெய்பிரகாஷ், ஸ்டார்ட் அப் இந்தியா ஆலோசகராக உள்ளார். ஆராய்ச்சி மற்றும் இன்குபேஷன் சார்ந்த இந்திய அளவிலான அடல் இன்குபேஷன் அமைப்பு, எதிர்கால இந்திய ஆராய்ச்சியாளர்களை உருவாக்க பிரதமர் மோடியால் துவக்கப்பட்டது. ஸ்டார்ட் அப் இந்தியா ஆலோசகராக சிறப்பாக செயல்படும் ஜெய்பிரகாஷ், அடல் இன்குபேஷன் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

