/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலையில் நாளை ஜமாபந்தி துவக்கம்; 28ம் தேதி வரை நடக்கிறது
/
உடுமலையில் நாளை ஜமாபந்தி துவக்கம்; 28ம் தேதி வரை நடக்கிறது
உடுமலையில் நாளை ஜமாபந்தி துவக்கம்; 28ம் தேதி வரை நடக்கிறது
உடுமலையில் நாளை ஜமாபந்தி துவக்கம்; 28ம் தேதி வரை நடக்கிறது
ADDED : மே 18, 2025 10:19 PM
உடுமலை ; உடுமலை தாலுகாவில், நாளை (20ம் தேதி) முதல், 28 ம் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது.
ஆண்டு தோறும் கிராம கணக்குகள் தணிக்கை மற்றும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உடனடி தீர்வு காணும் ஜமாபந்தி, உடுமலை தாலுகாவில், வரும், 20ம் தேதி துவங்குகிறது. திருப்பூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில், அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
நாளை (20ம் தேதி), உடுமலை உள்வட்டத்திற்குட்பட்ட, சின்னவீரம்பட்டி, குறுஞ்சேரி. அந்தியூர், வெனசப்பட்டி, கணபதிபாளையம், உடுமலை, பெரியகோட்டை, கணக்கம்பாளையம், தென் பூதிநத்தம், பூலாங்கிணர், ராகல்பாவி, ரா.வேலூர், போடிபட்டி, கண்ணமநாயக்கனுார் 1 மற்றும் 2 ஆகிய கிராமங்களுக்கு நடைபெறுகிறது.
* 22ம் தேதி, குறிச்சிக்கோட்டை உள்வட்டத்திலுள்ள, ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், வெங்கிட்டாபுரம், சின்ன குமாரபாளையம், குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், தும்பலப் பட்டி, தளி 1 மற்றும் 2, போகிகவுண்டன் தாசர்பட்டி, குரல் குட்டை, குருவப்பநாயக்கனூர், ஆண்டியகவுண்டனூர், 1 மற்றும் 2, மானுப்பட்டி, எலையமுத்தூர், கல்லாபுரம் ஆகிய கிராமங்களுக்கு நடக்கிறது.
* 23ம் தேதி, பெரிய வாளவாடி உள்வட்டத்திற்குட்பட்ட, வலையபாளையம், எரிசனம்பட்டி, கொடுங்கியம், தின்னப்பட்டி, சர்க்கார்புதூர், ரெட்டிபாளையம், ஜிலேபிநாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம், சின்னப்பாப்பனூத்து, பெரியபாப்பனூத்து, உடுக்கம்பாளையம், புங்கமுத்தூர், செல்லப்பம்பாளையம், தேவனூர்புதூர், ராவணாபுரம், பெரியவாளவாடி, சின்னவாளவாடி, தீபாலபட்டி, மொடக்குப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு நடக்கிறது.
* 27ம் தேதி குடிமங்கலம் உள்வட்டத்திற்கு உட்பட்ட, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், ஆமந்தகடவு, வடுகபாளையம், குடிமங்கலம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம் ஆகிய கிராமங்களுக்கு நடக்கிறது.
* 28ம் தேதி, பெதப்பம்பட்டி உள்வட்டத்திற்கு உட்பட்ட, மூங்கில் தொழுவு, வாகத்தொழுவு, வீதம்பட்டி, கொங்கல் நகரம், சோமவாரபட்டி, தொட்டம்பட்டி, முக்கூட்டு ஜல்லிபட்டி, கொசவம்பாளையம், அணிக்கடவு, விருகல்பட்டி, புதுப்பாளையம், இலுப்ப நகரம், பண்ணைக்கி-ணறு ஆகிய கிராமங்களுக்கு நடக்கிறது.
ஜமாபந்தியின் போது, உள்வட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், அரசின் நலதிட்டங்கள், பல்வேறு வகையான சான்றுகள், பட்டா மாறுதல், நில அளவை, நத்தம் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, ரேஷன் கார்டு மற்றும் பொதுவான பிரச்னைகள் குறித்து மனு அளித்து தீர்வு காணலாம், என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.