/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டுக்கு திருப்பூர் குமரன் பெயர் தெருமுனை பிரசாரத்தில் ஜெயராமன் உறுதி
/
பஸ் ஸ்டாண்டுக்கு திருப்பூர் குமரன் பெயர் தெருமுனை பிரசாரத்தில் ஜெயராமன் உறுதி
பஸ் ஸ்டாண்டுக்கு திருப்பூர் குமரன் பெயர் தெருமுனை பிரசாரத்தில் ஜெயராமன் உறுதி
பஸ் ஸ்டாண்டுக்கு திருப்பூர் குமரன் பெயர் தெருமுனை பிரசாரத்தில் ஜெயராமன் உறுதி
ADDED : ஜூலை 13, 2025 12:41 AM
அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், தெருமுனை பிரசாரம் புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்தது.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் அட்லஸ் லோகநாதன், தலைமை வகித்தார். பகுதி செயலாளர் கனகராஜ், முன்னிலை வகித்தார்.
மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், பேசியதாவது: இன்னும் எட்டு அமாவாசைக்குள் தி.மு.க ஆட்சி வீட்டுக்கு செல்ல போகிறது. தற்போது காவல் துறையினரின் கை, கால்களில் விலங்கு மாட்டப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் தினம்தோறும் கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து நடக்கிறது. குடிநீர், மின்சாரம் கட்டணம் உயர்வு, வீட்டு வரி, குப்பை வரி உயர்வு, மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். திருப்பூர் மேயர் குப்பையை ஊருக்கு மத்தியில் கொட்டி வருகிறார். மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தோல்வியடைந்து விட்டது.
வேலம்பாளையத்தில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவமனை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. ஒரு வாரத்தில் மருத்துவமனையை திறக்கவில்லை என்றால் விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமையில் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும். அதுபோல், குப்பை கொட்டுவதை நிறுத்தகோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது. அதற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், கருணாநிதி பெயரை வைத்துள்ளனர். பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதி பெயரை எடுத்து விட்டு, தியாகி குமரன் பெயர் வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ., விஜயகுமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் கருணாகரன், முத்து, தங்கராஜ், ஹரிஹர சுதன், வேலுமணி, மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் நீதிராஜன், ஆண்டவர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.