ADDED : நவ 13, 2024 05:28 AM

திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் (2024 - 25) பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்று, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பள்ளிகளுக்கு இடையிலான குறுமைய போட்டிகளில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள போட்டிகள், 600 மீ., - 400 மீ., ஓட்டம்; 80 மீ., தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளனர். அதே பிரிவில், குழு போட்டிகளில், மாணவர்களுக்கான ஹாக்கி; மாணவியருக்கான பூப்பந்து, கையெறி பந்து, கையுந்துபந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பதினேழு வயது மற்றும் 19 வயது பிரிவு தடகளத்தில், 100 மீ., - 200 மீ., - 400 மீ., - 800 மீ., - 1500 மீ., - 3000 மீ., ஓட்டம்; 110 மற்றும் 400 மீ., தடை தாண்டும் ஓட்டம் என அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பெற்றுள்ளனர்.
சாதித்த மாணவ, மாணவியருக்கு பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகாவாணி, பள்ளி முதல்வர் மணிமலர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரும் மாணவர்களை வாழ்த்தினர்.

