/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மறையூரில் ஜீப் இயக்க தடையால் மக்கள் பாதிப்பு; டிரைவர்கள் போராட்டம்
/
மறையூரில் ஜீப் இயக்க தடையால் மக்கள் பாதிப்பு; டிரைவர்கள் போராட்டம்
மறையூரில் ஜீப் இயக்க தடையால் மக்கள் பாதிப்பு; டிரைவர்கள் போராட்டம்
மறையூரில் ஜீப் இயக்க தடையால் மக்கள் பாதிப்பு; டிரைவர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 07, 2025 10:46 PM

உடுமலை; உடுமலை அருகேயுள்ள மறையூர், காந்தலுார் பகுதிகளில் ஜீப் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிரைவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள, கேரள மாநிலம் மறையூர், காந்தலுார் பகுதிகள் சுற்றுலா மையமாக உள்ளது. சுற்றுலா பயணியரை சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச்சென்று, காண்பிக்க, 200க்கும் மேற்பட்ட ஜீப்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதே போல், மறையூர், கோவில் கடவு, காந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், மருத்துவம், உணவு பொருட்கள் என அனைத்திற்கும் உடுமலைக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காக, ஏராளமான ஜீப்கள், வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், போத்தமேடு பகுதியில், ஜீப் விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து, அம்மாவட்ட கலெக்டர் ஜீப்கள் இயக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனால், 200க்கும் மேற்பட்ட ஜீப்கள் இயக்கிய டிரைவர்கள், தொழிலாளர்கள் குடும்பத்தினர் பாதித்துள்ளனர். மேலும், சுற்றுலா பயணியர் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, சுற்றுலாத்துறையும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், மறையூர், உடுமலை உள்ளிட்ட நகரங்களுக்கு, அத்தியாவசிய மருத்துவ தேவைக்கு கூட வர முடியாத நிலை உள்ளது.
இதனால், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் கடுமையாக பாதித்துள்ளனர். ஜீப் இயக்க தடை விதித்ததைக்கண்டித்து, மறையூர் பகுதியில், ஜீப் டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.