/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகை - பணம் பறிப்பு வழக்கு; மேலும் 4 பேர் சிக்கினர்
/
நகை - பணம் பறிப்பு வழக்கு; மேலும் 4 பேர் சிக்கினர்
நகை - பணம் பறிப்பு வழக்கு; மேலும் 4 பேர் சிக்கினர்
நகை - பணம் பறிப்பு வழக்கு; மேலும் 4 பேர் சிக்கினர்
ADDED : ஜூன் 07, 2025 12:55 AM

பெருமாநல்லூர்; காதலிப்பது போல் நடித்து, பணம், நகை பறித்த வழக்கில், மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அரச்சலுார் பூசாரி வீதியை சேர்ந்த கல்லுாரி மாணவி கிருத்திகா, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஜெகதீசன், என்பவருடன் மொபைல் போனில் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர்.
கல்லுாரி மாணவி அழைத்ததன் பேரில் பெருமாநல்லுார் அருகேயுள்ள சொட்டமேடு என்ற பகுதிக்கு ஜெகதீசன் சென்றார். அங்கு மாணவியின் நண்பரான பழனி சாமி என்பவரது வீட்டில் இருவரும் தனியாக இருந்துள்ளனர்.
திடீரென வீட்டுக்குள் புகுந்த பழனிசாமி, அவரது நண்பர் அருண் ஆகியோர் இருவரையும் வீடியோ எடுத்துள்ளனர். அதே கும்பலுடன் சேர்ந்து கொண்டு, வீடியோவை காட்டி ஜெகதீசனை, மாணவி கிருத்திகா மிரட்டினர். அதன்பின், ஜெகதீசனிடமிருந்து, 2 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் 2.10 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தலைமறைவானது.
ஜெகதீசன், பெருமாநல்லுார் போலீசில் அளித்த புகாரின்பேரில், கிருத்திகா, 19, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியைச் சேர்ந்த அருண், 33, அந்தியூர் ஜி.எஸ்., காலனி பகுதியை சேர்ந்த பழனிசாமி, 51, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதில், தொடர்புடைய தலைமறைவாக இருந்த பவானியை சேர்ந்த ராஜசேகர், 49, வேலுாரை சேர்ந்த சுரேஷ்குமார், 36, நரேஷ்குமார், 38, சேலத்தை சேர்ந்த நெல்சன், 41, என 4 பேர் உள்பட மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரண்டு பவுன் தங்கச் செயின் மற்றும் 2.10 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மாணவி கிருத்திகா, இந்த கும்பலுடன் சேர்ந்து பணத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும், இந்த கும்பல் இதேபோல், வேறு யாரிடமாவது பணம் பறித்துள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.