/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கூட்டுக்குடிநீர் திட்டம் புதிய குழாய்கள் பதிப்பு'
/
'கூட்டுக்குடிநீர் திட்டம் புதிய குழாய்கள் பதிப்பு'
'கூட்டுக்குடிநீர் திட்டம் புதிய குழாய்கள் பதிப்பு'
'கூட்டுக்குடிநீர் திட்டம் புதிய குழாய்கள் பதிப்பு'
ADDED : ஜூன் 29, 2025 12:59 AM
காங்கயம் : காங்கயம் நகராட்சி மன்ற கூட்டரங்கில், வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் சூரியப்பிரகாஷ், துணை தலைவர் கமலவேணி, நகராட்சி கமிஷனர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர்.
நகராட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், மூன்று பணிகள், 14 கோடி ரூபாய் மதிப்பிலும், காலை உணவு திட்டத்துக்கான சமையற்கூடம், 34 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நமக்கு நாமே திட்டத்தில் ஏழு பணிகள் உட்பட 87 பணிகள், 82 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குழாய்கள் பதிக்கும் பணி துவங்கவுள்ளது. முத்துார் முதல் காங்கயம் வரையிலான குழாய்கள் சேதமடைந்துள்ள நிலையில் அவற்றை அகற்றி விட்டு புதிய குழாய்கள் பதிக்கப்படும். இதற்கான அனுமதி, நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன. பணிகள் விரைவில் துவங்கி முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.