தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூட்டு குடிநீர் திட்ட தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் குடிநீர் வினியோகம் பாதிப்பு

கூட்டு குடிநீர் திட்ட தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் குடிநீர் வினியோகம் பாதிப்பு

கூட்டு குடிநீர் திட்ட தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் குடிநீர் வினியோகம் பாதிப்பு


UPDATED : மே 08, 2026 05:40 PM

ADDED : மே 08, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 05:40 PM ADDED : மே 08, 2026 05:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட குடிநீர் திட்டங்களை இயக்கும் தொழிலாளர்கள், ஊதியம் வழங்காததால் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள் மற்றும் 5 பேரூராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் கேள்விக்குறியாகியுள்ளது.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணை தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள 72 ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் தளி, சங்கராமநல்லுார், கொமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு, குடிநீர் வழங்கும் வகையில் 4 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தளி கால்வாயில் நீர் உந்து நிலையங்கள் வாயிலாக நீர் எடுத்து, குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டம், கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், மடத்துக்குளம் குடிநீர் திட்டம் மற்றும் மடத்துக்குளம் மற்றும் பேரூராட்சிகளுக்கு கூடுதல் குடிநீர் திட்டம் என நான்கு குடிநீர் திட்டங்களில் குடிநீர் சுத்திகரிப்பு செய்து, குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

24 மணி நேரமும் செயல்படும் இக்குடிநீர் திட்டங்கள் வாயிலாக, தினமும், 32 எம்.எல்.டி., குடிநீர், மூன்று ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர் திட்டங்களை இயக்குவதற்கு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இங்கு, 45க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், குடிநீர் திட்டங்களை இயக்க , தொழிலாளர்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், கடந்த ஒன்றரை மாதமாக, ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளது.

தொழிலாளர்கள் ஊதியம் கேட்டால், ஒப்பந்த காலம் நிறைவு பெற்றுள்ளது; குடிநீர் வடிகால் வாரியம் தொகை வழங்கவில்லை, என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் திட்டங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே, கோடை வெயில் காரணமாக, கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் திட்டங்களை இயக்காமல், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி, விரைவில் தீர்வு காண வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us