/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜே.பி. வெள்ளி மாளிகை பல்லடத்தில் கிளை திறப்பு
/
ஜே.பி. வெள்ளி மாளிகை பல்லடத்தில் கிளை திறப்பு
ADDED : அக் 07, 2025 01:05 AM

பல்லடம்;திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் செயல்பட்டு வரும் ஜே.பி. வெள்ளி மாளிகையின் கிளை பல்லடத்தில் நேற்று திறக்கப்பட்டது. பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி, ஆத்மா அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். முதல் விற்பனையை சுவாதி சின்னச்சாமி துவக்கி வைத்தார். பகவான் ரியல் எஸ்டேட் சக்தி, குமார் ஆகியோர் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டனர். பழத்தோட்டம் சுப்ரமணி - சரஸ்வதி, பல்லடம் பார்த்தசாரதி - சித்ரா தம்பதியர் குத்துவிளக்கேற்றினர்.
ஜே.பி. வெள்ளி மாளிகை உரிமையாளர்கள் ஜெயப்பிரகாஷ், சுரேஷ் கூறியதாவது:
பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளர் ஆதரவுடன் இயங்கி வரும் ஜே.பி. வெள்ளி மாளிகை, பல்லடத்தில், வெள்ளிக்கென்றே பிரத்யேகமாக ேஷாரூம் திறந்துள்ளது. புதுமையான டிசைன்களில் வெள்ளிக் கொலுசு வகைகள், ஹால்மார்க் தரத்தில் வெள்ளி பாத்திரங்கள், செய்கூலி, சேதராம் இல்லாமல் விற்பனைக்கு உள்ளது. தங்கத்தை மிஞ்சும் கலைவண்ணத்தில், வெள்ளி ஆன்டிக் நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. குறிப்பிட்ட ரகங்களுக்கு பத்து முதல் 15 சதவீதம் தள்ளுபடி, 99.9 தரத்தில் வெள்ளி பரிசு பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. தரச்சான்றுடன் வெள்ளியில் தயாரிக்கப்பட்ட ராசிக்கல் மோதிரங்கள், பூஜை பொருட்கள் விற்கப்படுகின்றன.