/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமரச நாள் விழிப்புணர்வு நீதிபதிகள் பங்கேற்பு
/
சமரச நாள் விழிப்புணர்வு நீதிபதிகள் பங்கேற்பு
ADDED : ஏப் 09, 2025 11:18 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட சமரச மையம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம், நேற்று மாவட்ட கோர்ட் வளாகத்தில் துவங்கி, தென்னம்பாளையம் வரை சென்று, மீண்டும் கோர்ட் வளாகத்தில் நிறைவடைந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் துவக்கி வைத்தார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்லதுரை, சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஷபீனா, சமரச மைய சமரசர்களாக உள்ள வக்கீல்கள், கே.எம்.சி., சட்டக் கல்லுாரி முதல்வர் சவுந்திரபாண்டியன், சட்டக் கல்லுாரி மாணவர்கள், கோர்ட் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வக்கீல் சங்க தலைவர் சுப்ரமணியம் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட நீதிபதி ஸ்ரீகுமார், முதன்மை சார்பு நீதிபதி ஸ்ரீவித்யா ஆகியோர் பேசினர். முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் சமரச மைய நோக்கங்கள் குறித்த நோட்டீஸ்களை மக்களுக்கு வழங்கினார். இதுதொடர்பான விளம்பர காணொளி வாகனத்தை பார்வையிட்டார்.