/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிற்சி முடித்த நீதிபதிகள் பணிக்குத் திரும்பினர்
/
பயிற்சி முடித்த நீதிபதிகள் பணிக்குத் திரும்பினர்
ADDED : ஏப் 06, 2025 09:57 PM
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்களில், நீதிபதி காலிப்பணியிடங்கள் புதிதாக பணி நியமனம் பெற்ற நீதிபதிகள் மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட நீதிபதிகள் வாயிலாக நிரப்பப்பட்டது.
அவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு, கோர்ட் நடவடிக்கைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக, சென்னையில் உள்ள ஜூடிசியரி அகாடமியில் 3 மாதப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு சென்ற நீதிபதிகள் பயிற்சி முடிந்து மீண்டும் தங்கள் பணியிடங்களில் சேர்ந்தனர். திருப்பூர் கூடுதல் மகிளா கோர்ட்; ஜே.எம். எண் 2 மற்றும் எண் 3 ஆகியவற்றின் நீதிபதிகள் தங்கள் பணிகளைத் துவங்கினர்.
அதே போல் அவிநாசி, பல்லடம், உடுமலை ஆகிய பகுதிகளில் மாவட்ட உரிமையியல் கோர்ட் மற்றும் காங்கயம் ஜே.எம்., கோர்ட் ஆகியவற்றின் நீதிபதிகளும் நீதித்துறை பயிற்சி முடித்து தங்கள் பணியிடங்களில் இணைந்தனர்.
இந்த கோர்ட்களில் இது வரை கூடுதல் பொறுப்பாக வேறு நீதிபதிகள் பணியாற்றினர்.

