ADDED : டிச 27, 2024 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், ; தமிழக ஜூடோ சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஜூடோ சங்கம் சார்பில், மாநில அளவிலான சப்-ஜூனியர் போட்டி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில் நடந்தது.அதில், மாணவர் பிரிவில், 30 - 66 கிலோ எடை வரை, மாணவியர் பிரிவில், 27 - 57 கிலோ எடை பிரிவு என, 9 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 145 பேர் பங்கேற்றனர். மாணவியர் பிரிவில், ஹரிணி, யுவாஞ்சலின், உத்ரா, பாரதி, காவ்யா, கீர்த்தனி, லிதன்யா ஆகியோர் பல்வேறு எடைப்பிரிவுகளில், முதலிடம் பிடித்தனர். இவர்கள் தமிழக அணி சார்பில், தேசிய போட்டியில் பங்கேற்கும் தகுதி பெறுவர்.

