/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோர்ட்டை நாடுவோருக்கு தாமதிக்காமல் நீதி: நீதிபதி அறிவுரை
/
கோர்ட்டை நாடுவோருக்கு தாமதிக்காமல் நீதி: நீதிபதி அறிவுரை
கோர்ட்டை நாடுவோருக்கு தாமதிக்காமல் நீதி: நீதிபதி அறிவுரை
கோர்ட்டை நாடுவோருக்கு தாமதிக்காமல் நீதி: நீதிபதி அறிவுரை
ADDED : பிப் 18, 2024 02:24 AM

திருப்பூர்:திருப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விபத்து இழப்பீடு வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று துவங்கப்பட்டது;
சிறப்பு நீதிமன்றத்தை துவக்கிவைத்து, சென்னை ஐகோர்ட் நீதிபதி மாலா பேசியதாவது:
மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு திருப்பூரில் கூடுதல் கோர்ட் திறக்கப்பட்டுள்ளது. இ-பைலிங், ஆன்லைன் டிராக்கிங் என கோர்ட்டை நாடுவோருக்கு வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
நீதியை நாடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள கோர்ட்களின் எண்ணிக்கை தற்போது, 39 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், 1,267 கோர்ட்கள் உள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, 5,059 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 2,469 வழக்குகள் இந்த கோர்ட்டுக்கு மாற்றப்படுகின்றன. எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட் விரைவில் துவங்கப்பட உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப, கோர்ட்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நீதித்துறையை பொறுத்தவரை, இதை நாடுவோருக்கு நாம் செய்ய வேண்டியது, தாமதிக்காமல் நீதியை பெறுவது தான். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்பார்கள். மோட்டார் வாகன விபத்து உட்பட பல வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும். இளம் வக்கீல்கள் இதை கருத்தில் கொண்டு செயல்பட்டாலே, வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சொர்ணம் நடராஜன், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.