/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலையரசன் - கலையரசி விருது! திருப்பூரில் இருந்து 19 பேர் தேர்வு
/
கலையரசன் - கலையரசி விருது! திருப்பூரில் இருந்து 19 பேர் தேர்வு
கலையரசன் - கலையரசி விருது! திருப்பூரில் இருந்து 19 பேர் தேர்வு
கலையரசன் - கலையரசி விருது! திருப்பூரில் இருந்து 19 பேர் தேர்வு
ADDED : ஜன 18, 2025 12:31 AM
திருப்பூர்; அரசு பள்ளி மாணவ, மாணவியரின் கலைத்திறனை வெளிப்படுத்தி, ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. பள்ளி, வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு அந்தந்த மாவட்ட அளவில் கலைத்திருவிழா, 2024 நவ., மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கான மாநில கலைத்திருவிழா கடந்த வாரம் நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், இ.பி.இ.டி., கல்லுாரி வளாகத்தில் நடந்த போட்டியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு பிரிவில், மாநிலம் முழுதும் இருந்து, ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாநில கலைத்திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு கலையரசன், கலையரசி விருது வழங்கும் விழா வரும், 24ம் தேதி நடக்கிறது.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கும் நிகழ்வில் திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், புல்லாங்குழல் வாசித்தலில் முதலிடம் பெற்ற உடுமலை பள்ளி மாணவி, சிறுபூலுவப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவியர் ஒன்பது பேர் உட்பட, 19 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் சென்னை செல்கின்றனர்.