/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இளைஞர்களின் பாதையை செம்மையாக்கியவர் கலாம்'
/
'இளைஞர்களின் பாதையை செம்மையாக்கியவர் கலாம்'
ADDED : அக் 16, 2024 12:32 AM

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் முன்னிட்டு, இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கு, கல்லுாரி அரங்கில் நடத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், ''அப்துல் கலாம், தன் பொன்மொழிகள் வாயிலாக ஏராளமான இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியவர். மாணவர்கள், தவறான வழியில் செல்வதை தவிர்த்து, கனவுகளை நனவாக்க உழைக்க வேண்டும் என்றார். ஒழுக்கம், ஊக்கம், விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவை வாழ்க்கையில் முன்னேற மிக அவசியம்'' என்றார்.
முன்னதாக, என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், வரவேற்றார். பேராசிரியர்கள் சக்தி செல்வம், முஸ்தாக், செல்வராஜ் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, 'துாய்மையே சேவை' திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்துல் கலாம் போன்று முக கவசம் அணிந்த மாணவர்கள், சுற்றுப்புறம் பாதுகாக்க மஞ்சப்பை 'பிரமிடு' அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.