ADDED : பிப் 16, 2025 11:49 PM

திருப்பூர்; திருப்பூர், எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நல சங்கம் சார்பில், எட்டாம் ஆண்டு பொங்கல் விழா, நேற்று முன்தினம் கோலப்போட்டியுடன் துவங்கியது. நேற்று காலை பொங்கல் வைத்து, வழிபாடு நடந்தது.
ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், 'பொட்டட்டோ கேதரிங்', 'லெமன் ஸ்பூன்', 'பிரேக்கிங்', 'பலுான் பாசிங்', 'ஸ்லோ சைக்கிள், சாக்கு ஓட்டம், 'வாட்டர் பில்லிங்', கயிறு இழுத்தல், உரியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
வயது மூத்தோர், நடுத்தர வயதினர், இளைஞர் - இளம்பெண்கள், சிறுவர் -சிறுமியர் என, அனைத்து வயது பிரிவினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, இளங்கோ கலைக்குழுவினரின், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் முதல் மூன்று பரிசு பெற்றவர்கள் மற்றும் ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு, கேடயம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நல சங்கத்தினரும், விழாக்குழுவினரும் செய்திருந்தனர்.

