/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காளிவேலம்பட்டி -குப்பை தொட்டியாகி மாறி வரும் குட்டை
/
காளிவேலம்பட்டி -குப்பை தொட்டியாகி மாறி வரும் குட்டை
காளிவேலம்பட்டி -குப்பை தொட்டியாகி மாறி வரும் குட்டை
காளிவேலம்பட்டி -குப்பை தொட்டியாகி மாறி வரும் குட்டை
ADDED : நவ 06, 2025 04:32 AM

பல்லடம்:
பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, காளிவேலம்பட்டி கிராமத்தில், விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள, நீர் ஆதார குட்டை ஒன்றில், குப்பைகள் கொட்டி எரிக்கப்பட்டு வருகின்றன.
அப்பகுதியினர் கூறியதாவது:
எங்கள் ஊருக்கு, நீர் ஆதாரமாக உள்ள குட்டையில், சிலர், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை கொட்டி, குட்டையை, குப்பை தொட்டியாக மாற்றி வருகின்றனர். சில நேரங்களில் குப்பைகள் தீ வைத்தும் எரிக்கப்படுகின்றன. இந்த குட்டை நீர் ஆதாரமாக உள்ளது என்பதுடன், கால்நடைகளும் அடிக்கடி மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. குட்டையில் கொட்டப்படும் குப்பைகள் கழிவுகளால், நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன், கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, குட்டைக்குள், குப்பைகள் கழிவுகள் கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

