/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 8ம் தேதி ரேஷன் குறைகேட்பு
/
வரும் 8ம் தேதி ரேஷன் குறைகேட்பு
ADDED : நவ 06, 2025 04:32 AM
திருப்பூர்: ரேஷன் குறைகேட்பு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறுகிறது.
அவிநாசி தாலுகாவில் பழங்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், தாராபுரத்தில் கிளான்குண்டல், காங்கயத்தில் எல்லப்பாளையம் புதுார், மடத்துக்குளம் நரசிங்காபுரம், பல்லடத்தில் கரடிவாவி, திருப்பூர் வடக்கில் வேலம்பாளையம், திருப்பூர் தெற்கில் மாணிக்காபுரம், உடுமலையில் பெரியபட்டி, ஊத்துக்குளியில் செங்கப்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
காலை 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர்.
ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை குறித்து பதிவு செய்தல், மின்னணு குடும்ப அட்டை சார்ந்த கோரிக்கைகளை முகாம் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

