ADDED : ஜூன் 12, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருநீலகண்டபுரத்திலுள்ள காமாட்சி அம்மன் கோவிலில், 55ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 8ம் தேதி துவங்கி நடைபெற்றது. 10ம் தேதி, தீர்த்த ஊர்வலம், சலங்கை ஆட்டம், இரவில் அம்மை அழைத்தல் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் காலை, பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். பொங்கல் வைக்கப்பட்டது.
நிறைவு நாளான நேற்று மதியம், மஞ்சள் நீர் அபிேஷகம் நடைபெற்றது. காமாட்சி அம்மன், மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 3:00 மணிக்கு, மேள தாளம் முழங்க, காமதேனு வாகனத்தில், அம்மன் வீதியுலா வந்தார்.