/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூண்டியில் ஒலித்த கந்த சஷ்டி கவச பாராயணம் கந்த சஷ்டி கவச பாராயணம், வள்ளிக்கும்மி
/
பூண்டியில் ஒலித்த கந்த சஷ்டி கவச பாராயணம் கந்த சஷ்டி கவச பாராயணம், வள்ளிக்கும்மி
பூண்டியில் ஒலித்த கந்த சஷ்டி கவச பாராயணம் கந்த சஷ்டி கவச பாராயணம், வள்ளிக்கும்மி
பூண்டியில் ஒலித்த கந்த சஷ்டி கவச பாராயணம் கந்த சஷ்டி கவச பாராயணம், வள்ளிக்கும்மி
ADDED : பிப் 05, 2024 01:28 AM

திருப்பூர்;'நிறை மனிதர்கள்' ஆன்மிக குழுவினர், தமிழகத்தில் உள்ள 48 முருகன் கோவில்களுக்கு சென்று, தியானம், யோகா மற்றும் 48 நாட்களுக்கு அதிகாலையில் கந்த சஷ்டி கவச பாராயணம் செய்து வருகின்றனர்.
நிறைவு நாளில், முருகன் கோவிலில் செவ்வாய் ஹோரையில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். முதன்முதலில் சென்னிமலையிலும், இரண்டாவதாக பழமுதிர்ச்சோலையிலும், மூன்றாவதாக திருப்பரங்குன்றத்திலும் நிகழ்ச்சி நடந்தது.
நான்காவதாக, திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகிலுள்ள திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
முருகப்பெருமானின் மயில் வாகனத்திற்கும், வேலிற்கும் வழிபாடு செய்து விழா துவங்கியது. பின்னர் கந்த சஷ்டி கவச பாராயணம் செய்யப்பட்டது. திருமுருகநாத சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பிரகார வழிபாடும், பெரியசாமி சித்தர் ஜீவ சமாதி வழிபாடும் நடந்தது.
பிற்பகலில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சியும், பாராட்டும், மகிழ்வான குடும்பத்திற்கு விருதும் வழங்கப்பட்டன. தலைமை ஒருங்கிணைப்பாளர் யாதுமானவன் வழிகாட்டுதலில் குடும்ப ஒற்றுமைக்கான சிறப்பு சொற்பொழிவும் நடந்தது. ஐநுாறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இணை ஒருங்கிணைப்பாளர் ஹரி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
திருமுறை முற்றோதல்
திருமுருகன்பூண்டி கோவில் வளாகத்தில் நேற்று, திருப்பூர் சைவ சித்தாந்த சபை சார்பில், பன்னிரு திருமுறை தொடர் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை,5:00 மணிக்கு துவங்கி, 7:00 மணி வரை,முற்றோதல் நடந்தது. ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.

