/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கயம் தொழில்நுட்பக் கல்லுாரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
/
காங்கயம் தொழில்நுட்பக் கல்லுாரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
காங்கயம் தொழில்நுட்பக் கல்லுாரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
காங்கயம் தொழில்நுட்பக் கல்லுாரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஆக 21, 2025 11:40 PM

திருப்பூர்; காங்கயம் தொழில்நுட்பக் கல்லுாரியில், புதிய மாணவர் சேர்க்கை(2025-29) குழுவினருக்கான மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி, 'ஸ்ப்ரவுட் 25' மற்றும் மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ராம்குமார் வரவேற்றார்.
தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திர கவுடா பிரதான உரை நிகழ்த்தினார். தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி பேசினார். முக்கிய விருந்தினராக உடுமலை ஆர்.கே.ஆர்., பள்ளிக்குழுமத் தலைவர் ராமசாமி, சிறப்பு விருந்தினர்களாக ஜென்வொர்க்ஸ். ஏஐ டெக்னாலஜி சொலுாசன்ஸ் நிறுவனத்தின் பிரதம ஆலோசகர் சிவகுமார் நாகலிங்கம், தொழில் வழிகாட்டல் நிபுணர் மற்றும் ஆய்வாளர் அஷ்வின் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
தாளாளர் ஆனந்தவடிவேல், இ.பி.இ.டி., கல்விக்குழு முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர். கல்லுாரி உறுப்பினர் சனுராகவ், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அறிவியல் மற்றும் மனிதவளத்துறை தலைவர் சம்பத்குமார் நன்றி கூறினார்.