/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
/
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜன 22, 2024 12:39 AM
திருப்பூர்:காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திருப்பூர் - பல்லடம் ரோடு, காட்டன்மார்க்கெட் வளாகத்தில், ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 20ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. வாஸ்துசாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.
நேற்று காலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி மற்றும் மங்கள இசையுடன் விழா துவங்கியது. பூஜைகளுக்கு பின், காலை, 9:00 மணிக்கு, கோபுர கலசங்கள் மற்றும் ஸ்ரீ கற்பக விநாயகருக்கு மஹா அபிஷேகம் செய்விக்கப்பட்டது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, இன்று முதல் மண்டல பூஜை துவங்குகிறது.