/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத நல்லிணக்கம் போற்றும் வகையில் தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு
/
மத நல்லிணக்கம் போற்றும் வகையில் தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு
மத நல்லிணக்கம் போற்றும் வகையில் தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு
மத நல்லிணக்கம் போற்றும் வகையில் தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு
ADDED : டிச 04, 2025 06:12 AM

அவிநாசி: அவிநாசி அருகே மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த சேவூர் அருகேயுள்ள கஸ்பா கானுாரில், பழமைவாய்ந்த தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உரூஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றும் வகையில் கார்த்திகை தீபத் திருநாளின் போது மூன்று முதல் ஏழு நாட்களுக்கு அப்பகுதி மக்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
தர்கா ஹஜ்ரத் சம்சுதீன் கூறும்போது, ''வேண்டுதல்கள் நிறைவேறுவதால் இந்த தர்காவிற்கு ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் வந்து வழிபடுகின்றனர். கார்த்திகை தீபத்தின் போது இப்பகுதியில் உள்ள மக்கள் தீபம் ஏற்றுவது ஆண்டுதோறும் வழக்கமாக உள்ளது.
மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்த தர்கா உதாரணமாக விளங்குகிறது'' என்றார்.