/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேரள உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க.வினர் பிரசாரம்
/
கேரள உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க.வினர் பிரசாரம்
ADDED : டிச 08, 2025 05:24 AM
திருப்பூர்: கேரளாவில், உள்ளாட்சி தேர்தல், வரும் 9, 11 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில், போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, அ.தி.மு.க.வினர் பிரசாரத்துக்கு சென்றுள்ளனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பில், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, இரண்டு மாவட்ட கவுன்சிலர் வார்டு; மூன்று ஊராட்சி ஒன்றிய வார்டு மற்றும் 10 ஊராட்சிகளின் தேர்தல் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், ஆனந்தன் உள்ளிட்டோர், ஊராட்சி வாரியாக சென்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ''தமிழகத்தில் இருந்து குடிபெயர்ந்த நபர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அவர்கள் வெற்றிக்காக, தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறோம்,'' என்றார்.

