/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கதித்தமலையில் களைகட்டும் பசுமை
/
கதித்தமலையில் களைகட்டும் பசுமை
ADDED : டிச 08, 2025 05:25 AM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 'துளிகள் காங்கயம்' அமைப்பு சார்பில், ஊத்துக்குளி கதித்தமலை பகுதியில், 'கதித்தமலை வனம்' அமைத்து பராமரிக்கப்படுகிறது.
அறநிலையத்துறையின், கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அரியவகை மரக்கன்றுகள் நட்டு நந்தவனம் உருவாக்கும் பணி நேற்று துவங்கியது.
கோவில் நிர்வாகம், 'வனத்துக்குள் திருப்பூர்' மற்றும் 'துளிகள் காங்கயம்', கதித்தமலை வனம் திட்டக்குழுவினர் சார்பில், நேற்று மரக்கன்று நடும் விழா நடந்தது. கோவிலுக்கு சொந்தமான, தென்முகம் காங்கயம்பாளையம் கிராமத்தில் உள்ள, நிலத்தில், நந்தவனம் உருவாக்கும் முயற்சியாக, மரக்கன்று நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம், 14 ஏக்கர் பரப்பில், பாரம்பரியமான, 2,800 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கோவில் அதிகாரிகள், பசுமை அமைப்பினர் முன்னிலையில், மரக்கன்று நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
வேம்பு - 500, புங்கன் - 500, புளியன் - 100, இலுப்பை-500, நாவல் , கொடுக்கா புளி, வாகை மரங்கள் தலா, 100; தேக்கு, மகோகனி, குமிழ் மரக்கன்றுகள் தலா, 200, செம்மரம், சந்தனம், வேங்கை, மருத மரம், கருங்காலி மரக்கன்றுகள் தலா, 50 மற்றும் அழிந்துவரும் அரிய வகையை சேர்ந்த 100 மரக்கன்றுகள் என, 2,800 மரக்கன்றுகள் நடப்பட்டன.

