/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொடி நாள் வசூல் கூடுதலாக்க தீவிரம்
/
கொடி நாள் வசூல் கூடுதலாக்க தீவிரம்
ADDED : டிச 08, 2025 05:25 AM

திருப்பூர்: கொடி நாளை முன்னிட்டு, முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கொடி நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கொடி நாள் உண்டியலில் நிதி அளித்து, வசூலை துவக்கிவைத்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசுகையில், ''நடப்பு ஆண்டுக்கான கொடி நாள் வசூல், தற்போது துவங்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ல், 1 கோடியே 35 லட்சத்து 51 ஆயிரத்து 90 ரூபாய் கொடிநாள் வசூல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் குடும்பத்தினரின் நலனுக்காக, கடந்தாண்டைவிட கூடுதலாக நடப்பாண்டு கொடிநாள் வசூல் வழங்கவேண்டும்'' என்றார்.
தேநீர் விருந்து நடந்தது. முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் புஷ்பலதா, உதவியாளர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

