/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'யங் இண்டியன்ஸ்' எஸ்.பி. பாராட்டு
/
'யங் இண்டியன்ஸ்' எஸ்.பி. பாராட்டு
ADDED : டிச 08, 2025 05:25 AM

திருப்பூர்: திருப்பூர் 'யங் இண்டியன்ஸ்' அமைப்பு, நடப்பு ஆண்டில் 125 இயக்கங்களை நடத்தியுள்ளது. 'தளிர்' மற்றும் 'யுவா' என, பல்வேறு விழிப்புணர்வு பணிகள், 'சைனோகிராப் - 3.0' என்ற தொழில்முனைவோர் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நடப்பு ஆண்டு தலைவராக இருந்த மோகன் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டு விழா மற்றும் 10வது ஆண்டு விழா, காருண்யா மண்டபத்தில் நடந்தது. எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில் ''யங் இண்டியன்ஸ் அமைப்பை முன்மாதிரியாக கொண்டு, சமூக சேவையை செய்ய வேண்டும்.
திருப்பூரில் மட்டுமல்லாது, கிராமப்புறத்திலும் சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டும்'என்றார். 2026க்கான தலைவராக விமல்குமார், துணை தலைவராக அஸ்வின் ஆகியோர்செயல்பட உள்ளனர்.

