/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசத்ய சாய் சேவை 250 பேருக்கு பயன்
/
ஸ்ரீசத்ய சாய் சேவை 250 பேருக்கு பயன்
ADDED : டிச 08, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், திருப்பூர் - பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப்பில் உள்ள ஸ்ரீ சத்ய சாயி சேவா மையத்தில் நேற்று நடந்தது.
திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 250 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, மருத்துவ குழுவினர், கண் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில், 54 பேர், இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 101 பேருக்கு, கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.

