/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து
/
பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து
ADDED : டிச 08, 2025 05:26 AM

பல்லடம்: பல்லடம் அருகே, ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவருக்கு சொந்தமான பழைய கழிவுப்பஞ்சு குடோன், இதே பகுதியில் செயல்பட்டு வருகிறது.
நேற்று காலை, குடோனின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அக்கம்பக்கத்தினர் பார்ப்பதற்குள், குடோன் தீ பற்றி எரியத் துவங்கியது.கரும்புகை வானுயரத்துக்கு வெளியேறியது. அங்கு வந்த பல்லடம் தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பு வைக்கப்பட்டிருந்த கழிவுப் பஞ்சுகள், தீயில் எரிந்து கருகின.
இதனால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. குடோனில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

