/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கேலோ இந்தியா' போட்டி; குமுதா பள்ளி மாணவி தேர்வு
/
'கேலோ இந்தியா' போட்டி; குமுதா பள்ளி மாணவி தேர்வு
ADDED : ஏப் 24, 2025 06:37 AM

திருப்பூர்; சென்னையில் 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு -2025'க்கான தேர்வுப்போட்டிகள் நடந்தன.
பெண்கள் வாலிபால் பிரிவில் 18 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக அணிக்காக 14 மாணவியர் தேர்வாயினர். இதில் குமுதா பள்ளி மாணவி யோகிஸ்ரீ தேர்வானார். வரும் மே மாதம் 7 முதல் 15ம் தேதி வரை பீஹார் மாநிலத்தில் நடைபெறவுள்ள 'கேலோ இந்தியா' போட்டியில் பங்கேற்க உள்ளார். பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச்செயலாளர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, பள்ளி துணை முதல்வர் வசந்தி உள்ளிட்டோர் மாணவியைப் பாராட்டினர்.