/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்டாலினுக்கு கணக்கு சொல்லித் தர தயார்: குஷ்பு
/
ஸ்டாலினுக்கு கணக்கு சொல்லித் தர தயார்: குஷ்பு
ADDED : பிப் 16, 2025 07:33 AM

திருப்பூர் : திருப்பூரில் பா.ஜ., பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பங்கேற்க வந்த குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு தமிழகத்துக்கு பட்ஜெட்டில் எந்த நிதியும் தரவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியில் அவர்கள் தமிழகத்துக்கு 8,500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. பா.ஜ., ஆட்சியில் இது வரை, 1.70 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு கணக்கு தெரியாமல் இருக்கலாம். எங்களிடம் கணக்கு உள்ளது. அவருக்கு தேவைப்பட்டால் கணக்கு சொல்லித் தர தயாராக உள்ளோம்.
தமிழகத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சி தி.மு.க., மற்றும் காங்., கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதனால், அச்சத்தால் ஏதேதோ பேசுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து கிடக்கிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் நிலை உள்ளது. ஆளும் கட்சியினர், சட்ட விரோத நபர்கள் குறித்து பேசுவோர் மீது தாக்குதல் நடக்கிறது. தமிழகத்துக்கு வந்த போது, இதை பாதுகாப்பான மாநிலமாக கருதினோம். ஆனால், நிலைமை இன்று தலைகீழாக மாறிவிட்டது.
தமிழகத்தில் வங்க தேசத்தினர் ஊடுருவல் அதிகரித்துள்ளது, இதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் பதில் தர வேண்டும். திருப்பூருக்கு கூட தி.மு.க., கடந்த ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. மோடியின் ஆளுமையை உலகமே கண்டு வியக்கிறது. அமெரிக்க அதிபர், டிரம்ப், மோடியை சிறந்த தலைவர் என்று பாராட்டுகிறார்.
காஷ்மீர் பிரச்னைக்கு எப்படி நல்லதொரு தீர்வை மத்திய அரசு ஏற்படுத்தியதோ அதே போல் இங்கும் விரைவில் நல்ல தீர்வு காணப்படும். சீமான் பேச்சுகள் குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், தனித்து தேர்தலைச் சந்திக்கும் அந்த தைரியம் பாராட்ட கூடியது.
இவ்வாறு அவர் கூறினார்.

