/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறுநீரக பரிசோதனை முகாம்
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறுநீரக பரிசோதனை முகாம்
ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறுநீரக பரிசோதனை முகாம்
ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறுநீரக பரிசோதனை முகாம்
ADDED : ஆக 21, 2025 09:45 PM
திருப்பூர்; திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் வளாகத்தில் சிறப்பு சிறுநீரக பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம், சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஹரீஷ் சிவஞானம் தலைமையில் நாளையும்(23ம் தேதி), நாளை மறுநாளும்(24ம் தேதி) நடக்கிறது.
சர்க்கரை, சிறுநீர் பரிசோதனை, கிரியாட்டினின், யூரியா, யூரிக் ஆசிட் பரிசோதனைகள், சிறப்பு சிறுநீரக மருத்துவர் - உணவியல் நிபுணரின் ஆலோசனை முற்றிலும் இலவசம். ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எலும்பு அடர்த்தி பரிசோதனை இலவசமாக வழங்கப்படும். டயாலிசிஸ் சிகிச்சைகளை மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் இலவசமாக பெறுவதற்கான பரிந்துரை வழங்கப்படுகிறது. அனைத்து பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை பெற பதிவுக்கட்டணம் ரூபாய் 200 மட்டுமே. முகாமில் பங்கேற்க முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: 98422 09999, 98422 11116.
இத்தகவலை ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.